5 செகண்ட்ஸ் ரூல்!ஒவ்வொரு புதிய வருடத்தின் துவக்கத்திலும் அல்லது பிறந்த நாளின் போதும் சாதிக்க வேண்டிய, கடைப் பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறோம். பெரும்பாலும் முந்தைய வருடங்களின் பட்டியலில் இடம் பிடித்த விஷயங்களே இவ்வாண்டு பட்டியலில் நீடிக்கும். அடுத்த ஆண்டும் இதே விஷயங்களைத்தான் நாம் செய்து முடிக்காமல் வைத்திருப்போம். உண்மையில் இதுவரை செய்ய நினைத்து செய்யமுடியாமல் போனவற்றை நினைத்து நாம் வருந்தும் நீதி நாள்கள்தான் அவை. நாம் சாதிக்க வேண்டுமென நினைக்கிற சில விஷயங்கள் தினமும் மனதில் உறுத்திக்கொண்டே வந்தாலும் நம்மால் ஏன் அவற்றை செய்து முடிக்கவில்லை?

எத்தனையோ சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் செல்கிறோம்; தன்னம்பிக்கை நூல்கள் வாசிக்கிறோம்; சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறோம் ஆனாலும் நாம் எண்ணியதை முடிக்கும் உத்வேகத்தைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறாமே அதன் காரணம் என்ன?
இவற்றிற்கு அற்புதமான தீர்வு சொல்கிறார் மெல் ராபின்ஸ். இன்றைய தேதிக்கு உலகின் மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர் இவர்தான். ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையைத் துவக்கிய இவர் ஓபரா வின்ஃப்ரே போன்ற ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு சுயமுன்னேற்ற பயிற்றுனராக ஆனார். இவரது ஒவ்வொரு யூ ட்யூப் டெட் வீடியோக்களும் பல லட்சம் பேர்களால் தினமும் பார்க்கப்படுகிறது.  இவர் முன்வைக்கும் தீர்வு ‘5 செகண்ட்ஸ் ரூல்’
ஒரு விஷயம் உங்கள் மனதில் தோன்றுகிறது; அதைச் செய்தால் உங்களுக்கு நல்லது என்றும் தோன்றுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள். அதை யோசித்து திட்டமிட்டு ஆற அமர செய்யலாமென அதை ஒரு நோட்டில் அல்லது செல்போனில் குறித்து வைத்துக்கொள்வீர்கள் (இப்படிப்பட்ட குறிப்புகள் ஒவ்வொருவரிடமும் மலை மலையாக இருக்கும்) ஆனால், அப்படிச் செய்யாமல் எந்த ஐடியாவையும் தோன்றிய ஐந்து நொடிகளுக்குள் செயல்படுத்த துவங்குங்கள் என்கிறார் மெல். உதாரணமாக காலையில் படுக்கையில் தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை இளைக்கலாம் என தோன்றுகிறது. நாள் நட்சத்திரம் பார்க்காமல் அடுத்த ஐந்து செகண்டுகளுக்குள் ஷூவைத் தேடி எடுத்து அட்லீஸ்ட் நடக்கவாவது துவங்க வேண்டும். ஒரு நல்ல நாவலுக்கான கரு மனதில் தோன்றுகிறது. கொஞ்சம் அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின் எழுதலாமென நினைக்க கூடாது. தோன்றிய ஐந்தாவது நொடிக்குள் அதன் முதல் அத்தியாயத்தை எழுத துவங்கிவிட வேண்டும். மீத அத்தியாயத்தை முதல் அத்தியாயம் தானே இழுத்துக்கொண்டு போகும். நினைவிருக்கட்டும் நாம் அப்புறம் பார்க்கலாமென ஒத்தி வைத்த விஷயங்களை எப்போதுமே பார்த்ததில்லை என்பதுதான் உண்மை.

நல்ல பிஸினஸ் ஐடியா டிரெய்னில் பயணிக்கும்போது தோன்றுகிறது. அதை உங்கள் பார்ட்னருடன் விவாதிக்க நினைக்கிறீர்கள். டிரெய்னை விட்டு இறங்கும் வரை காத்திருக்காதே என்கிறார் மெல். உடனே ஒரு மெஸெஜைப் போடுங்கள். அந்த காரியம் வைக்கோலில் தீ பற்றுவது போல சட சடவென்று பற்றிக்கொள்ளும்.

என்ன நண்பர்களே, நீங்களும் இந்த 5 செகண்ட்ஸ் ரூலை உங்கள் வாழ்க்கையில் சோதித்துப் பார்க்கத் தயாராகி விட்டீர்களா?

- திருக்குறள் அரசி, பிஸினஸ் மாஸ்டர் இதழுக்காக எழுதியது

Comments

  1. Good morning have a nice day friends

    ReplyDelete
  2. The best News,,,Thank you very much
    Have a nice Night

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அர்த்த மண்டபம்

ஜெயமோகன் அரங்கம்