விஷ்ணுபுரம் விழாவும் அர்த்த மண்டபமும்

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விருது விழாவின் மக்கள் தொடர்பு பணிகளை அர்த்த மண்டபம் மேற்கொண்டது. எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் பெரிய அறிமுகம் இல்லாததால் விழாவிற்குப் பெரிய வரவேற்பு இருக்காது என தமிழிலக்கிய வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவி வந்தது.

அதனை முறியடிக்கும் வகையில் அமைந்தது விழா. அரங்கம் நிரம்பியதோடு மட்டுமல்லாமல் அரங்கத்திற்கு வெளியிலும் நூற்றுக்கணக்கான இலக்கிய வாசகர்கள் நின்று கொண்டு நிகழ்ச்சியை ரசித்தார்கள்.

முந்தைய ஆண்டுகளை விட விழாச் செய்திகள் ஏராளமான ஊடகங்களில் இடம் பெற்றிருந்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர், தினமணி, தி ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து தமிழ் ஆகிய நாளிதழ்கள் தொடர்ந்து விழாச் செய்திகளை, படங்களை, எழுத்தாளர்களின் நேர்காணல்களை வெளியிட்டன. ஊடகங்கள் இலக்கிய நிகழ்வுகளைக் கண்டு கொள்வதில்லை என்கிற அவதூறு இதனால் பொய்யானது என்கிற வகையில் விழா நிகழ்ச்சிகள் நாளிதழ்களில், பண்பலைகளில், இணையதளங்களில் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி.

அனைத்து நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும் அர்த்த மண்டபம் தன் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

Comments

Popular posts from this blog

அர்த்த மண்டபம்

ஜெயமோகன் அரங்கம்