Posts

`ஜி.எஸ்.டி- ஒரே நாடு ஒரே வரி'

Image
பிரபல பொருளாதார அறிஞரும் கோவையின் முதன்மையான ஆடிட்டருமான திரு. ஜி.கார்த்திகேயன் எழுதிய  `ஜி.எஸ்.டி- ஒரே நாடு ஒரே வரி' எனும் நூல் சமீபத்தில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற அளவில் மிக எளிமையாகவும் அதே சமயம் ஜி.எஸ்.டி குறித்த உளமயக்குகளைக் களையும் வண்ணமும் அற்புதமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. வெளிவந்த நாள் முதல் பரபரப்பாக விற்றுவரும் இந்த மிகச்சிறந்த நூலின் ஆக்கத்தில் நாங்களும் சிறிய பங்காற்றியுள்ளோம் என்பதில் பேருவுவகை கொள்கிறோம்.


செய்திக்குறிப்பு:

 http://www.vikatan.com/news/tamilnadu/96626-gst-will-have-many-difficulties---auditor-s-gurumurthy.html

http://tamil.thehindu.com/business/article19335683.ece


ஜெயமோகன் அரங்கம்

Image
கொடிசியா வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டதையொட்டி கோவை புத்தகத் திருவிழாவில் “ஜெயமோகன் அரங்கம்” அர்த்தமண்டபம் சார்பில் அமைக்கப்பட்டது. அரங்கத்தினை எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் திறந்து வைத்தார். ஜெயமோகன் வாசகர்களுக்கு நூலில் கையொப்பம் இட்டார். அரங்கில் ஜெயமோகன் புத்தகங்களுடன், ஆவணப்படம், பரிந்துரைத்த நூல்கள் ஆகியனவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு நவீன எழுத்தாளரின் ஆக்கங்கள், அவரைப்பற்றிய சிறப்பிதழ்கள், பரிந்துரைகள், புகைப்படங்கள், உரைகள் என அனைத்தும் ஒரே அரங்கில் வைக்கப்பட்டிருப்பது அனேகமாக இதுதான் முதல் முறை என வாசகர்கள் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தினார்கள். அறிவுலகுடன் அர்த்தமண்டபம் பெருமையுடன் இணைகிறது. 

அக்ரியின் அனா.. ஆவன்னா - புதுமுக விவசாயிகளுக்கான அறிமுக கையேடு!

Image
வேளாண்மையில் ஈடுபட வேண்டும் எனும் ஆர்வம் உண்டு. ஆனால், முன் அனுபவம் இல்லை, போதிய வழிகாட்டல் இல்லை என தவித்துக்கொண்டிருந்த சுமார் 1200 இளைஞர்களுக்கு முன்னோடி விவசாயிகளும் துறைசார் நிபுணர்களும் தங்களது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய மகத்தான கருத்தரங்கம் ‘உழவே தலை’ கடந்த சனிக்கிழமை கோவையில் சிறப்பாக நிகழ்ந்தேறியது. இந்த அற்புதமான நிகழ்ச்சியை இந்திய தொழில் வர்த்தகசபையும், கொடிசியாவும் ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிப் புத்தகத்தை உருவாக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சிப் புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

Arthamandapam!

Arthamandapam, a name to beckon , for services in the field of advertising!
With a vibrant and an experienced team , Arthamandapam, strives for excellence in areas such as content writing, translation, media services, PR , Press releases, Social Media Management, Digital Marketing both in Tamil and English for leading Corporate  and Advertising agencies across India!

 For details contact us at Telephone: 9787050464 or mail us at arthamandapam@gmail.com

5 செகண்ட்ஸ் ரூல்!

Image
ஒவ்வொரு புதிய வருடத்தின் துவக்கத்திலும் அல்லது பிறந்த நாளின் போதும் சாதிக்க வேண்டிய, கடைப் பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறோம். பெரும்பாலும் முந்தைய வருடங்களின் பட்டியலில் இடம் பிடித்த விஷயங்களே இவ்வாண்டு பட்டியலில் நீடிக்கும். அடுத்த ஆண்டும் இதே விஷயங்களைத்தான் நாம் செய்து முடிக்காமல் வைத்திருப்போம். உண்மையில் இதுவரை செய்ய நினைத்து செய்யமுடியாமல் போனவற்றை நினைத்து நாம் வருந்தும் நீதி நாள்கள்தான் அவை. நாம் சாதிக்க வேண்டுமென நினைக்கிற சில விஷயங்கள் தினமும் மனதில் உறுத்திக்கொண்டே வந்தாலும் நம்மால் ஏன் அவற்றை செய்து முடிக்கவில்லை?

எத்தனையோ சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் செல்கிறோம்; தன்னம்பிக்கை நூல்கள் வாசிக்கிறோம்; சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறோம் ஆனாலும் நாம் எண்ணியதை முடிக்கும் உத்வேகத்தைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறாமே அதன் காரணம் என்ன?
இவற்றிற்கு அற்புதமான தீர்வு சொல்கிறார் மெல் ராபின்ஸ். இன்றைய தேதிக்கு உலகின் மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர் இவர்தான். ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையைத் துவக்கிய இவர் ஓபரா வின்ஃப்ரே போன்ற ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு சுயமுன்னேற்ற பய…

விஷ்ணுபுரம் விழாவும் அர்த்த மண்டபமும்

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விருது விழாவின் மக்கள் தொடர்பு பணிகளை அர்த்த மண்டபம் மேற்கொண்டது. எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் பெரிய அறிமுகம் இல்லாததால் விழாவிற்குப் பெரிய வரவேற்பு இருக்காது என தமிழிலக்கிய வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவி வந்தது.

அதனை முறியடிக்கும் வகையில் அமைந்தது விழா. அரங்கம் நிரம்பியதோடு மட்டுமல்லாமல் அரங்கத்திற்கு வெளியிலும் நூற்றுக்கணக்கான இலக்கிய வாசகர்கள் நின்று கொண்டு நிகழ்ச்சியை ரசித்தார்கள்.

முந்தைய ஆண்டுகளை விட விழாச் செய்திகள் ஏராளமான ஊடகங்களில் இடம் பெற்றிருந்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர், தினமணி, தி ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து தமிழ் ஆகிய நாளிதழ்கள் தொடர்ந்து விழாச் செய்திகளை, படங்களை, எழுத்தாளர்களின் நேர்காணல்களை வெளியிட்டன. ஊடகங்கள் இலக்கிய நிகழ்வுகளைக் கண்டு கொள்வதில்லை என்கிற அவதூறு இதனால் பொய்யானது என்கிற வகையில் விழா நிகழ்ச்சிகள் நாளிதழ்களில், பண்பலைகளில், இணையதளங்களில் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி.

அனைத்து நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும் அர்த்த மண்டபம் தன் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிற…